உங்கள் கார்களுக்கு தேவைப்படும் செம்மையான GADGETS

READING LIGHT:
  


     


காரில் பயன்படுத்தக் கூடிய இரவு நேர பயணத்தின்போது படிப்பதற்கு மற்றும் எழுதுவதற்கு பயன்படக்கூடிய ரீடிங் விளக்கை ஸ்பீட்வேவ் நிறுவனம் தயாரித்துள்ளது. அளவில் சிறியதாகவும், மிக அதிக அளவு வெளிச்சத்தை தரும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை நிறுவுவதும் எளிது. 16 சிறிய எல்.இ.டி. பல்புகளை கொன்ட தொகுப்பாக இது வந்துள்ளது.தேவையற்ற சமயத்தில் எளிதாக சுழற்சி வைத்து விடலாம்.இதன் வெளிச்சம் கண்களை கூசாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.200

 ULTRASONIC REPELER:


காரை ஒரு சில நாட்கள் உபயோகிக்காத சூழல் ஏற்படுவதுண்டு. அது போன்ற சமயங்களில் காரினுள் எலி , கரப்பான்பூச்சி ஆகியவை புகுந்து விட வாய்ப்பு உண்டு. சில சமயம் சிலந்தி வலைப்பின்னி விடும். அத்தகைய நிகழ்வுகளை தடுக்க உதவுவது எக்ஸிஸோர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அல்ட்ரா சோனிக் ரெபெல்லர். இது கரப்பான்பூச்சி,எலி ஆகியவை வெறுத்து ஓடும் அளவுக்கு அல்ட்ரா சோனிக் சத்தத்தை எழுப்பும். 
இந்த சத்தத்தை கேட்டு அவை ஓடிவிடும். கார் பேட்டரி மூலம் செயல்படுவதால், காரை இரண்டு மூன்று நாட்கள் உபயோகப்படுத்தாமலிருந்தாலும் இது செயல்பட்டு பூச்சிகளை  விரட்டி விடும். கார் ஓடும் போது இந்தக் கருவி  தானாகவே நின்று விடும்.இதன் விலை சுமார் ரூ.1355




Post a Comment

0 Comments