தமிழ் தெரிந்தால் போதும் செம்மையான தமிழ் GAME .


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு ஒரு தமிழ் GAME ஐ பற்றி பார்க்க போகிறோம். இதற்கு நம் தாய் மொழி தமிழ் மட்டும் தெரிந்தால் போதும் இந்த GAME ஐ விளையாடலாம். இது OFFLINE GAME என்பதால் BATTERY, DATA இந்த இரண்டும் நாம் சேமித்து கொள்ளலாம். இந்த GAME ஐ  எப்போதும் விளையாட முடியாது எதாவது நேரத்தில் TIME PASS ஆக வேண்டும் என்று நினைக்கும் போது இந்த GAME சரியானதாக இருக்கும். நாம் game ஐ பற்றி பார்ப்போம்.


இந்த ஒரு GAME ற்க்குல்  பல விதமான தமிழ் விளையாட்டுகள் அடங்கி உள்ளன.

நாம் முதலாவதாக பார்க்கும் விளையாட்டு படம் பார்த்து கண்டுபிட . இந்த விளையாட்டில் மேலே தெரியும் படத்தை போல இரண்டு படங்கள் இருக்கும் அதை பார்த்து நாம் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக படத்திற்குள் கண்டுபிடிக்க இந்த விளையாட்டு என்னவென்றால் படத்தில் நிறைய பொருட்கள் இருக்கும் அதை பார்த்து நாம் சரயாக எழுத வேண்டும்.

அடுத்ததாக வினாடி வினா இந்த விளையாட்டு என்னவென்றால் ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு நான்கு பதில்கள் இருக்கும் நீங்கள் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

நான்காவதாக திருக்குறள் இதில் திருக்குறளை தனித்தனி வார்த்தையாக பிரித்து வைத்திருப்பார்கள் அதை நாம் முழுமையான திருக்குறளாக அமைக்க வேண்டும்.

ஐந்தாவதாக  வித்தியாசங்கள் ஆறு இதில் படம் கொடுத்திருப்பார்கள் அதில் இருக்கும் ஆறு வித்தியாசங்களை நாம் எழுத வேண்டும்.

இது போன்ற பல விளையாட்டுகள் இன்னும் இதில் உள்ளது.

நீங்கள் பெற்றோர்களாக இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு தமிழை கற்க உதவும்.

                                          DOWNLOAD SOLLI ADI

Post a Comment

0 Comments